கேப்ஸ்யூல்
பெட்டிக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது Ear cleaning buds. எளிதாகவும், குறைவான விலையிலும் கிடைப்பதால் பட்ஸ் பயன்பாடு இப்போது பரவலாகிவிட்டது. அதெல்லாம் சரி... காதுகளைச் சுத்தம் செய்ய இந்த பட்ஸை பயன்படுத்தலாமா?கூடாது என்றே கூறுகிறார்கள் காது மூக்குதொண்டை மருத்துவர்கள்.காதுகளிலிருந்து வெளியேறும் அழுக்குகளையும், காதுகளுக்குள்ளிருக்கும் சுரப்பிகளால் உருவாகும் குரும்பிகளையும் அகற்ற பட்ஸை பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. முடிந்தவரை பட்ஸை வைத்துக் காதுகளைக் குடைவதைத் தவிர்ப்பதே நல்லது.அவ்வாறு குடைவதால், காதில் அதிகமாக அழுக்கு ஊற ஆரம்பித்துவிடும். அதைத் தொடர்ந்து தானாக அழுக்கை வெளியேற்றும் திறனையும் காது இழந்துவிடும்.
தவறுதலாக காதில் உள்ள செவிப்பறையில் பட்டு ஓட்டை விழுந்துவிட்டால் மேலும் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும். அதனால் காது குடைவதைத் தவிர்ப்பதே நல்லது.காது குடைவதில் கிடைக்கும் சுகம் காரணமாக சிலருக்கு அது பழக்கமாகவே ஆகிவிடும். சிலர் அந்த சுகத்துக்கு அடிமையாகி விடுவார்கள். இதுவும் ஆபத்தானது. காதுக்குள் ஏதேனும் அரிப்பு இருந்தால் ENT மருத்துவரை அணுகுவதே சரியானது.
Invite People To Here