Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
Home >> Trichy >> Tourist Spots >> Tourist Spot Details

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில்

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில்
View Gallery View map
நேரம்
காலை  9.00 முதல் 12.00  வரை
மாலை  1.15 முதல் 5.45  வரை
மாலை  6.45 முதல் 8.45  வரை
தொடர்புக்கு
நிர்வாக அதிகாரி
ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி.
தமிழ்நாடு ,இந்தியா.
  • தொலைபேசி
  • 0431-2432246
  • 0431-2436666
  • வலைத்தளம்
  • http://www.srirangam.org
  • மின்னஞ்சல்
  • srirangamtemple@gmail.com

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில் வரலாறு

            இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் விரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

பட தொகுப்பு


Gallery not found

வரைபடம்