Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
Home >> Trichy >> Temples >> Temple Detail

அருள்மிகு இளங்காட்டு மாரியம்மன்

அருள்மிகு இளங்காட்டு மாரியம்மன்
View Gallery View map
மூலவர்
அருள்மிகு இளங்காட்டு மாரியம்மன்
ஏனைய கடவுள்கள்
கருப்பண்ணச் சுவாமி, பிள்ளையார், பாலமுருகன், நாகர் சன்னதி
சிறப்பு தரிசன நாள்
எல்லா நாட்களும்
தொடர்புக்கு
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் தமிழ்நாடு.

அருள்மிகு இளங்காட்டு மாரியம்மன் தல வரலாறு

இளங்காட்டு மாரியம்மன் திருச்சி கருமண்டபத்தில் அருள் பாலிக்கும் இளங்காட்டு மாரியம்மன் தன்னை நாடி வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அளிக்கிறார். கோயில் வரலாறு: தஞ்சை அடுத்த இளங்காடு என்ற ஊரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சரியான தங்கும் இடம் இல்லாதது கண்டு இளங்காட்டு மாரியம்மன் தனது மூத்த சகோதரியான சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள். அப்போது, அவ்வூர் வழியாக பழனிக்கு காவடி சுமந்துச் செல்லும் பக்தர்களுடன் சேர்ந்து நீயும் புறப்பட்டுச் செல், மலைக்கோட்டை நகரை நீ கடக்கும் போது, உன்னை காளியும், ஒண்டி கருப்பண்ணச் சுவாமியும் வழி மறிக்கும் இடத்திலேயே தங்கிக்கொள் என்று சமயபுரம் மாரியம்மன் கூறினார். அதன்படி, தங்கையும் காவடி சுமந்து சென்றவர்களுடன் புறப்பட்டாள். தஞ்சாவூர் வழியாக திருச்சியை வந்தடைந்து, மலைகோட்டையும் கடந்து நடைபயணம் தொடர கருமண்டபம் பகுதி வந்த போது காளியும், கருப்பண்ணச் சுவாமியும் இளங்காட்டு மாரியம்மனை வழிமறித்தனர். இதைத் தொடர்ந்து, கருமண்டபதிலேயே தங்கி அருள்பாலித்து வருகிறார் இளங்காட்டு மாரியம்மன். பின்னர், தான் வந்தது பற்றி ஒரு சிறுமியின் மூலம் அருள் வந்து கூறினாள். இளங்காட்டு மாரியம்மன். அதன் பின்னர் ஊர் மக்கள் கூடி அப்பகுதிலேயே இந்த ஆலயத்தை எழுப்பினர். இவ் அம்மன் கருவறையில் 4 கரங்களுடன் இன்முகத்துடன் அம்மன் அருள் புரிகிறாள். மாரியம்மன் மூன்று கரங்களில் உடுக்கை, கத்தி, கிண்ணமும், நான்காவது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் அருள் புரிகிறாள்.

தலச் சிறப்பு

ரோஜாப்பூ மாலை :
இளங்காட்டு மாரியம்மனுக்கு ரோஜாப்பூ மாலை வாங்கி வந்து அணிவித்து வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத் தடை போக்குதல். குழந்தைப்பேறு அளித்தல், வேலைவாய்ப்பு வேண்டுவோர் ஏராளமானோர் இதுபோன்று வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். வேண்டுதலைத் தொடர்ந்து இவர்கள் அம்மனுக்கு பட்டுப் புடவை, கருப்பண்ணச் சுவாமிக்கு வேட்டி அணிவித்து மகிழ்கின்றனர்.


Gallery not found

வரைபடம்

Goto Top