Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Home >> Trichy >> Temples >> Temple Detail

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீரங்கம்)

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீரங்கம்)
View Gallery View map
தரிசன நேரம்
  • காலை  9.00  முதல்  12.00 மதியம் 
    மதியம்  1.15  முதல்  5.45 மாலை 
    மாலை  6.45  முதல்  8.45 இரவு 
மூலவர்
ரங்கனாதர் ஸ்வாமி
ஏனைய கடவுள்கள்
தாயார் சன்னதி
சக்கரதாழ்வர் சன்னதி
உடயவர் (ராமானுஜர் சன்னதி)
கருடால்வார் சன்னதி
தன்வந்திர
சிறப்பு தரிசன நுழைவு சீட்டு
விஸ்வருபா தரிசனம் ஒரு நபர்க்கு ரூ. 50
விரைவு தரிசனம் ஒரு நபர்க்கு ரூ. 250
சிறப்பு தரிசன நாள்
வியாழன் மற்றும் சனி
சிறப்பு சேவை
வைரமுடி சேவை ரூ. 3,500/- ஹனுமான் திருமஞ்சனம் ரூ. 780/- சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் ரூ. 1075/- (சனிக்கிழமை தவிர) சிங்கர் திருமஞ்சனம் ரூ. 1750/- (சனிக்கிழமை தவிர) தன்வந்த்ரி திருமஞ்சனம் ரூ. 1200/- (வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர)
தொடர்புக்கு
நிர்வாக அதிகாரி
ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி.-620006 தமிழ்நாடு.
  • தொலைபேசி
  • 0431-2432246
  • 0431-2436666
  • வலைத்தளம்
  • http://www.srirangam.org
  • மின்னஞ்சல்
  • srirangamtemple@gmail.com

ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீரங்கம்) தல வரலாறு

        இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் விரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

வரைபடம்

Goto Top