Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
Home >> Trichy >> Temples >> Temple Detail

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் (குணசீலம்)

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் (குணசீலம்)
View Gallery View map
தரிசன நேரம்
  • காலை  6.30  முதல்  12.30 மாலை 
    மாலை  4.00  முதல்  8.30 மாலை 
மூலவர்
பிரசன்ன வெங்கடாஜலபதி
ஏனைய கடவுள்கள்
ஆஞ்சநேயர்
கோவர்த்தன கிருஷ்ணர்
காளிங்க நர்த்தனர்
நர்த்தன கண்ணன்
அபயஹஸ்த கிருஷ்ணர்
நவநீதகிருஷ்ணர்
நரசிம்ம
தொடர்புக்கு
நிர்வாகி
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், குணசீலம், திருச்சி. தமிழ்நாடு.
  • கைபேசி
  • 9486304251

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் (குணசீலம்) தல வரலாறு

        மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு "குணசீலம்" என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார். அப்போது குணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்று மூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். "பிரசன்ன வெங்கடாஜலபதி" எனப் பெயர் சூட்டப்பட்டது.

தலச் சிறப்பு

        சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். பெருமாள் இத்தலத்தில் திரிதளம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

வரைபடம்

Goto Top