Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
Home >> Trichy >> Temples >> Temple Detail

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் (உறையூர்)

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் (உறையூர்)
View Gallery View map
தரிசன நேரம்
  • காலை  5.30  முதல்  12.30 மாலை 
    மாலை  4.00  முதல்  8.30 மாலை 
மூலவர்
பஞ்சவர்ணேஸ்வரர்
ஏனைய கடவுள்கள்
காந்திமதியம்மை
கருடன்
காசிபர் மனைவி கத்துரு
கார்கோடன்
தொடர்புக்கு
நிர்வாக அதிகாரி
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி.-620003 தமிழ்நாடு.
  • தொலைபேசி
  • 0431-2768546
  • கைபேசி
  • 9791806457
  • 9443919091

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் (உறையூர்) தல வரலாறு

        சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.

தலச் சிறப்பு

        இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.


Gallery not found

வரைபடம்

Goto Top