Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கர்நாடகா தேர்தல்: பாஜக முன்னிலையை அடுத்து வரும் 17-ல் எடியூரப்பா கண்டீராவா ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்பு!

கர்நாடகா தேர்தல்: பாஜக முன்னிலையை அடுத்து வரும் 17-ல் எடியூரப்பா கண்டீராவா ஸ்டேடியத்தில் முதல்வராக பதவியேற்பு!கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி தற்போதும் நடந்து வருகின்றது. காலை 8 மணியிலிருந்தே பாஜக முன்னிலை பெற்ற நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையை பெற்றதையடுத்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இங்கு ஆட்சி அமைக்கும். தற்போது தேவையான 113-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.
தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.
பாஜகவின் எடியூரப்பா நாளை மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவகவுடா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என பாரதீய ஜனதா திட்டவட்டமாக கூறி உள்ளது.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 338
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments