Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் இன்று மாலை அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சியில் இன்று மாலை அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா: அமைச்சர்கள் பங்கேற்புபாரத முன்னேற்றக் கழகம் சார்பில் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா திருச்சியில் இன்று நடக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்துக்கொள்வதாக அக்கட்சியின் தலைவர் பாரதராஜா அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை 11.07.2018 அன்று வீரன் அழகுமுத்துக்கோன் 308-வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீசீனிவாசா மகாலில் இன்று மாலை 5 மணிக்கு வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகின்றது. இதில் அமைச்சர்கள் - எம்.பி.க்கள் - சர்வக்கட்சி பிரதிநிதிகள், பாமுகவின் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி, துணைத்தலைவர் ஆறுகோனார் மற்றும் யாதவர்களின் சங்கங்களை சேர்ந்தவர்கள், பாமுகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக பலரும் கலந்துக்கொண்டு வீரன் அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். அதுசமயம் பொதுமக்களும் திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்திட பாமுகவின் தலைவர் பாரதாராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 10-07-18
Total Visitors : 134
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments