Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தென்னூர் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜம் ஜீயர் ஆசீர்வாதம்

தென்னூர் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜம் ஜீயர் ஆசீர்வாதம்திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜம் ஜீயர் ஆசீர்வாதம் வழங்கி பாராட்டினார்.
திருச்சி தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆண்டாள் கோவில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜம் ஜீயர் நேற்று ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி தெரிவித்ததாவது:
திருப்பதி பெருமாளுக்கு குரு இராமானுஜர், ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு குரு மணவாள மாமுனி, ஒரு கடவுளிடம் குரு முலாமாக தான் போக வேண்டும். அப்படி இருக்கும் போது ஆன்மிக குரு நமது ஆச்சாரியன் இராமானுஜர், கல்வியை போதிக்கும் குரு உலகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர், ஆசிரியைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் படிப்புகள், படிப்புகளோடு சேர்ந்து பகவான் வழிபாடு(இறைவன் வழிபாடு) உண்டாக வேண்டும். இப்போது உள்ள கலிகாலத்தில் பகவான் நாம சங்கீர்த்தனம் தவிர வேறு ஒன்றும் நிம்மதியை தராது. நம்முடைய இந்து மத கலாச்சாரப்படி தமிழகம் எங்கும் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் நமது இந்து சம்பிர்தாய முறைப்படி சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இறைவுணர்ச்சி ஊட்டப்பட வேண்டும். நமது உலகத்திற்கு அம்மாவான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின், திருப்பாவை 30 பாசுரங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களிலும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இது உலகத்திற்கு நல்லது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் என்.வி.வி.முரளி, தலைமை ஆசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன், ஸ்ரீரங்கம் மண்டல துணை வட்டாட்சியர் கோகுல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 08-06-18
Total Visitors : 97
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments