Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி தண்ணீர் அமைப்பினர் குண்டூரில் தூய்மைப்பணி

திருச்சி தண்ணீர் அமைப்பினர் குண்டூரில் தூய்மைப்பணிதிருச்சியை அடுத்த குண்டூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அகற்றாத குப்பைகளை தண்ணீர் அமைப்பினர் அகற்றி சுத்தம் செய்தனர்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ளது குண்டூர் கிராமம். மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதியாக இருந்தாலும் மாநகராட்சி போன்று நாள்தோறும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகள் இங்கு நடைபெறுவது இல்லை. இதனால் இப்பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடுகள் உருவாகும் நிலை உருவானது. மாவட்ட நிர்வாகமோ, ஊராட்சியோ குப்பகளை அகற்றும் பணியினை செய்யவில்லை. இதனால் அந்தப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து குண்டூர் வடக்கு கிழக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினரும், தண்ணீர் அமைப்பினரும் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பணிகளுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 6.30 மணிக்கு விமிணிஜி பேருந்து நிலையம் எதிரில் உள்ள MIET சாலை தொடங்கி அய்யனார் கோவில் வரை உள்ள குப்பைகள், நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
மேலும் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் சென்று நெகிழி (பிளாஸ்டிக்) தவிர்த்து, துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் செய்தனர்.
தண்ணீர் அமைப்பினருடன் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குண்டூர் பேருந்து நிலையப் பகுதியில் பல மாதகளாங்க குவிந்துக் கிடக்கும் குப்பைகள் நெகிழிப்பைகள் மற்றும் சீமைக்கருவேல முள்களை அகற்றும் களப்பணிகளையும் மேற்கொண்டனர்.
இந்த தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குண்டூர் பெரிய ஏரி பாதுகாப்பு சங்கத்தின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்தார். தண்ணீர் அமைப்பின் சார்பில் தலைவர் எம்சேகரன் தலைமை தாங்கினார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம், இணைச் செயலாளர் பேரா. கி.சதீஷ்குமார், ஆலோசனைக் குழு உறுப்பினரும் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவருமான ஆர்.கே.ராஜா மற்றும் சிலம்பம் மாணவர்கள் பூபேஷ், மகேந்திரன், குண்டூர் நலச் சங்க உறுப்பினர் லலிதா மற்றும் பலர் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியினை மேற்கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் பிளாஷ்டிக் எனும் எமன் எனும் விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பைகளை அப்பகுதியில் உள்ள இல்லங்கள் தோறும் சென்று தண்ணீர் அமைப்பினர் வழங்கினர்.

  Source : justknow.in
Post Date : 14-05-18
Total Visitors : 220
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments