Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நீட் பலி 3: திருச்சி சுபஸ்ரீ மறைவை கண்டுகொல்லாத திருச்சி அதிமுகவினர்; கண்ணனுக்கு கே.என்.நேரு ஆறுதல்

நீட் பலி 3: திருச்சி சுபஸ்ரீ மறைவை கண்டுகொல்லாத திருச்சி அதிமுகவினர்; கண்ணனுக்கு கே.என்.நேரு ஆறுதல்தமிழ்நாட்டில் நீட் தேர்வு 3 பேரை பலிகொண்டுள்ளது. கடந்தாண்டு அனிதாவின் சுவடு மறைவதற்குள் இந்தாண்டு திருச்சி சுபஸ்ரீ, திருவண்ணாமலை ப்ரதீபா என பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. மாநிலத்தில் இன்னும் சில பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளை தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். இவரது மகள் சுபஸ்ரீ துறையூரில் உள்ள சௌடாம்பிகா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மருத்துவப்படிப்புக்கு கடந்தாண்டு முதல் நீட் நுழைவுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்ற நிலையில் அவரும் தனியார் நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து பயின்று நீட் தேர்வை எழுதினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நினைத்த மதிப்பெண்களை பெற்ற சுபஸ்ரீக்கு நீட் தேர்வில் நினைத்தது போல் மதிப்பெண்கள் பெறமுடியாமல் தோல்வியை தழுவினார். இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே வேதனையில் இருந்தவர் நேற்று முன் தினம் இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் எனத்தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த கொள்ளிடம் போலீஸார் சுபஸ்ரீயின் உடலைக்கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.
நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்து சுபஸ்ரீயின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டிற்கு சுபஸ்ரீயின் உடலை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அண்ணா தொழிற்சங்க தலைவராக பொறுப்பு வகிக்கும் கண்ணனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிறகு மாலை நேராக ஓயாமரி மின் மயானத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்றது.
சுபஸ்ரீ தற்கொலை குறித்து அறிந்த தினகரன் அணியை சேர்ந்த திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மனோகர், ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனைக்கே சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேருவும் கண்ணன் இல்லத்திற்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார்.
ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரின் மகள் நீட் தேர்வுக்கு பலி ஆனதற்கு ஆறுதல் சொல்லுவதற்கு கூட அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களோ, எம்.பி.களோ, நிர்வாகிகளோ யாரும் வராத நிலையில் எதிர்க்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 08-06-18
Total Visitors : 100
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments