Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 536 மனுக்கள்

திருச்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 536 மனுக்கள்திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 536 மனுக்கள் பெறப்பட்டது. மேலும், இராணுவத்தில் பணிபுரிந்து பணியிடைக்காலமான மற்றும் உடல் ஊனமுற்ற, முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர்களுக்கான பணிநியமன ஆணையினையும் மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இராணுவத்தில் பணிபுரிந்து பணியிடைக்காலமான மற்றும் உடல் ஊனமுற்ற, 6 முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு Special Drive அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் இளநிலை உதவியாளர்களாக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி IV (2015-2016) I Phase நேரடி நியமனத்திற்காக இளநிலை உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் இளநிலை உதவியாளர்களாக பணியிடம் வழங்கப்பட்ட ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளராக பணிபுரிந்து பணியிடைக்காலமான பி.பாலு என்பவரது வாரிசுதாரர்பா.சூர்யாஅர்விந்த் என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
5 நபர்களுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றுகளையும், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 12 இலட்சத்து 90 ஆயிரம் உதவித்தொகையினை கலெக்டர் வழங்கினார்.
டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளை மூலமாக ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களில் இடண்டாவது இடத்தைப்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த விமலா மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த செல்வி.பி.பிரித்திகா என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உறையூர், இராமலிங்க நகர், செநவாளர் காலணியைச் சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவி மு.ஸ்ரீதேவி கல்லூரி 3-ம் ஆண்டு படிக்க மாவட்ட நலப்பணி நிதியிலிருந்து கல்வி நிதியுதவியாக ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 38 பயனாளிகளுக்கு ரூபாய் 13 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் தொடர்பான மொத்தம் 536 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷிர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மீனாட்சி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

  Source : justknow.in
Post Date : 10-10-17
Total Visitors : 7
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments