Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Ippadai Vellum Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் போராட்டம்

வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் போராட்டம்திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்–ஜெயில் ரோட்டில் பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த வெங்காய மண்டி கடந்த சில நாட்களுக்கு முன் பழைய பால்பண்ணை அருகே புதிதாக கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
சப்–ஜெயில்ரோட்டில் இருந்த வெங்காயமண்டியில் ஏற்கனவே பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களையே புதிய வெங்காய மண்டியில் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வியாபாரிகளோ, ஏற்கனவே பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என்றும், அவ்வாறு வேலைக்கு வருபவர்களும் சங்கம் வைத்து கொண்டு வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர். இதனால் வியாபாரிகள் தரப்பினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பலர் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பழைய பால்பண்ணை அருகே புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட சென்றனர். இது பற்றி அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 117 பேரை கைது செய்தனர்.
போலீசாரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், புதிய வெங்காய மண்டியில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரியும், சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று காலை திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சப் –ஜெயில் ரோட்டில் பழைய வெங்காய மண்டி செயல்பட்ட இடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். வெங்காய மண்டி தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் என சுமார் 300–க்கும் மேற்பட்டவர்கள் சாலை ஓரம் அமர்ந்து இருந்தனர். புதிய வெங்காய மண்டியில் 276 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த வித நிபந்தனையும் இன்றி வேலை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்ட போக மாட்டோம். புதிய வெங்காய மண்டியில் சங்கத்தை சேராத தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் கமி‌ஷனர் பெரியண்ணன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய தொழிற்சங்க தலைவர்களான ராமலிங்கம் (தொ.மு.ச), ராஜா (சி.ஐ.டி.யு) ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட போவதாக கூறி ஆவேசமாக கிளம்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், இந்த பிரச்சினை பற்றி நாளை (இன்று) காலை மாநகர போலீஸ் கமி‌ஷனர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். அதுவரை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் கலைந்து சென்றனர்.

  Source : justknow.in
Post Date : 06-07-18
Total Visitors : 22
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments