Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   ‘மாணவர்களிடமிருந்து மாற்றம்’ குறித்து கேம்பியன் பள்ளி மாணவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உரையாடல்

 ‘மாணவர்களிடமிருந்து மாற்றம்’ குறித்து கேம்பியன் பள்ளி மாணவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உரையாடல்திருச்சி மாநகராட்சியில் ‘மாணவர்களிடமிருந்து மாற்றம்’ திட்டத்தின்படி கேம்பியன் பள்ளி மாணவ, மாணவர்களிடம் மாநகராட்சி
ஆணையர் ந.இரவிச்சந்திரன் தூய்மை அட்டை குறித்து விழிப்புனர்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முழு தீர்வை எட்டும் வகையில் மாணவர்களிடமிருந்து மாற்றம் என்ற புதிய திட்டத்தை 01.06.2018ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி ஜூலை 1ம் தேதிக்கு முன் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் மூலம் தூய்மை அட்டை வழங்க முடிவுசெய்து கேம்பியன்பள்ளி மாணவ, மாணவர்களிடம் ஆணையர் ந.இரவிச்சந்திரன், உதவிஆணையர் எம். தயாநிதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் தூய்மை அட்டை குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
இதன்போது மாநகராட்சி ஆணையர் மாணவர்களிடம் பேசியதாவது, ஜூலை 1ம் தேதி முதல் வீடுதோறும் வரும் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்கி, மாணவர்கள் அதற்கான கையொப்பத்தை தூய்மை அட்டையில் துப்புரவுப் பணியாளரிடம் பெற வேண்டும். துப்புரவுப் பணியாளர் வருகையை அல்லது வராத நாட்களை உறுதி செய்யும் வகையில், தூய்மை அட்டையில் அதற்கான குறியீடுகளை பெற்றோர்கள் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும்.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர்கள் தூய்மை அட்டையை பள்ளி வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வகுப்பாசிரியர்கள் ஜூலை மாதத்தில் அனைத்து நாட்களும் குப்பையை தரம் பிரித்து வழங்கிய மாணவர்களின் தூய்மை அட்டையை போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் 6ம் தேதி ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் வகுப்பாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட தூய்மை அட்டைகளில் இருந்து 3 அட்டைகளை மட்டும் எடுக்க வேண்டும். முதலில் எடுக்கப்படும் அட்டடைக்குரிய மாணவருக்கு முதல் பரிசாக ரூ.5,000 மதிப்பிலான சைக்கிள், 2-வதாக எடுக்கப்படும் அட்டைக்குதிய மாணவருக்கு ரூ.1,000 மதிப்புள்ள பரிசும், 3வதாக எடுக்கப்படும் அட்டைக்குரிய மாணவருக்கு ஆக்ஸ் போர்டு சொற்களஞ்சியமும் வழங்கப்படும்.
பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்களை ஆகஸ்ட் 6-ம் தேதி மாநகராட்சி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். தவிர, அதிக சதவீத குப்பையை தரம் பிரித்து வழங்கிய மாணவர்களைக் கொண்ட 10 பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இதன் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நமது மாநகராட்சி தூய்மையான மாநகரமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

  Source : justknow.in
Post Date : 08-06-18
Total Visitors : 64
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments