Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Ippadai Vellum Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கும், சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவக்குமாரை காவல்துறையினர் தாக்கியதாக கூறி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து விட்டு, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர்செல்வன் தலைமையில் கூடினர்.
பின்னர் 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக புறப்பட்டு புதுக்கோட்டை சாலையில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு கூடினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்பு வேலி அமைத்து அதன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பின்னர் வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய அரியமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் சில்வர் ஸ்டாலின், ஏட்டு கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென்று அவர்கள் தடுப்பை மீறி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சிலர் திடீரென்று திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு காவல்துறை ஆணையர் லுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அதன்பிறகு 8 பேர் மட்டும் காவல்துறை ஆணையரை சந்திக்க காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சங்க தலைவர் பன்னீர்செல்வன் உள்ளிட்ட 8 பேர் காவல்துறை ஆணையர் அமல்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதன்பிறகு வெளியில் வந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வழக்கறிஞர் சிவக்குமாரை தாக்கிய 2 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் கூறினோம். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட போலீசார் இரண்டு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிடுகிறேன். பின்னர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எனவே போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்’’ என்று கூறினார். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக சாலை மறியல் போராட்டத்தால் நேற்று திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 66
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments