Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  புதிய வெங்காய மண்டியில் வேலைகேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் பால்பண்ணை அருகே குடும்பத்துடன் சாலை மறியல்

புதிய வெங்காய மண்டியில் வேலைகேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் பால்பண்ணை அருகே குடும்பத்துடன் சாலை மறியல் புதிய வெங்காய மண்டியில் வேலைகேட்டு சுமைப்பணி தொழிலாளர்கள் பால்பண்ணை அருகே குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்– ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் மாதம் 3–ம் தேதி பழைய பால்பண்ணை திருச்சி– மதுரை சாலை அணுகுசாலை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சப் –ஜெயில் ரோடு வெங்காய மண்டியில் பல ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இதில் வேலை வழங்கப்படவில்லை. மாறாக புதிய வெங்காய மண்டி வியாபாரிகள் வெங்காய மூட்டைகளை ஏற்றி இறக்க தனியாக தொழிலாளர்களை நியமித்துக்கொண்டனர்.
இதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை இழந்த 277 தொழிலாளர்களும் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் புதிய வெங்காய மண்டியில் வேலை செய்பவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களே அல்ல, அவர்களை வைத்து மூட்டைகளை இறக்க தடை விதிக்க வேண்டும் என கோரி முற்றுகை போராட்டமும் நடத்தினார்கள். இதுபற்றி கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில் ஜூலை 12–ம் தேதி புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க கோரி குடும்பத்துடன் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக காந்திமார்க்கெட், வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று காலை திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திரண்டு நின்றனர். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி ராமலிங்கம், குணசேகரன் (தொ.மு.ச), ராஜா, ராமர் (சி.ஐ.டி.யு), பிரபாகரன் (எல்.எல்.எப்) ஆகியோர் பேசினார்கள். அப்போது புதிய வெங்காய மண்டியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கூறினார்கள்.
அதன் பின்னர் அங்கிருந்து அருகில் செயல்பட்டு வரும் புதிய வெங்காய மண்டியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு அரண் போல் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பெண்கள் உள்ளிட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அடிக்காதே, அடிக்காதே சுமைப்பணி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, ஆண்டாண்டு காலமாக செய்து வந்த வேலையை பறிக்காதே, தவிக்கிறோம், தவிக்கிறோம் சோறு தண்ணி இல்லாம தவிக்கிறோம், காவல் துறையே வியாபாரிகளுக்கு ஆதரவாக மாறி எங்களை தடுக்காதே என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.
போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் போலீஸ் தடுப்புக்காவலையும் தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக்ரோ‌ஷமாக கோ‌ஷமிட்ட தொழிலாளர்கள் சிலரை போலீசார் பிடித்து குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதே போல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களும் பெண் போலீசாருடன் மல்லுக்கட்டினார்கள். இதில் 2 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
போலீசார் தொழிலாளர்களை பிடித்து வேனுக்கு தள்ளி செல்வதும் அவர்கள் போலீஸ் பிடியில் இருந்த நழுவி மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவதுமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தினால் புதிய வெங்காய மண்டி அணுகு சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பழைய பால் பண்ணை ரவுண்டானாவில் இருந்தே போலீசார் மாற்று பாதை வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர்.
போராட்ட முடிவில் 70 பெண்கள் உள்பட 270 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண் தொழிலாளர்கள் பாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், ஆண் தொழிலாளர்கள் பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் அடைத்து வைக்கப்பட்டனர்.
போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், அருள் அமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சிவசுப்பிரமணியன், வேல் முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். புதிய வெங்காய மண்டி வாசல் அருகில் ஒரு தடுப்பு வேலி, அதனை தாண்டி சிறிது தூரத்தில் ஒரு தடுப்பு வேலி, பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே ஒரு தடுப்பு வேலி என மூன்றடுக்கு பாதுகாப்பினை போலீசார் ஏற்படுத்தி இருந்தனர்.
போராட்டம் நடத்திய தொழிலாளர்களை அடக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் குறிப்பாக சிறப்பு காவல் படை போலீசார் தலையில் தலைக்கவசம், முகத்திற்கு முக கவசம் அணிந்து கையில் கல்வீச்சு நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாக கேடயம் போன்ற தடுப்பான்கள் ஆகியவற்றை வைத்து இருந்தது தொழிலாளர்களை மிரள வைப்பதாக இருந்தது.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 45
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments