Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்கோயிலுக்கள் செல்ல ஜனாதிபதிக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் நேற்று திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய ஜனாதிபதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு இந்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததை கண்டித்து மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாவட்ட திக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார். மண்டல தலைவர் நற்குணம், செயலாளர் ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாநகர தலைவர் மருதை, புலவர் முருகேசன், செந்தமிழ் இனியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திராவிடர் கழகத்தைச்சேர்ந்த கனகராஜ் வரவேற்றார். இறுதியில் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

  Source : justknow.in
Post Date : 08-06-18
Total Visitors : 52
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments