Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும்
பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய
குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 12.08.2017, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் சம்மந்தப்பட்ட தனி வட்டாட்சியர்கள் ஃ வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் ஆளத்தூர், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன்னிலையிலும், திருச்சிராப்பள்ளி மேற்கு பொன்நகர், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையிலும், ஸ்ரீரங்கத்தில் பூலாங்குளத்துப்பட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முன்னிலையிலும், மணப்பாறையில் குளத்துராம்பட்டி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
மருங்காபுரியில் எம்.இடையபட்டி, திருச்சிராப்பள்ளி துணைப்பதிவாளர் முன்னிலையிலும், இலால்குடியில் ஆலங்குடிமகாஜனம், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையிலும், மண்ணச்சநல்லூரில் ஆரியப்பள்ளம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
முசிறியில் அஞ்சலம் முசிறி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையிலும், துறையூரில் அம்மாபாளையம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையிலும், தொட்டியத்தில் சலப்பட்டி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முன்னிலையிலும், திருவெறும்பூரில் சோழமாநகர் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட வட்டங்களில் எல்லா நியாய விலைக்கடை வளாகத்திலும் இக்குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைபாடுகளை கூட்டங்களில் கலந்து கொண்டு, மனுக்கள் மூலம் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 11-08-17
Total Visitors : 33
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments