Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும்; ஈரோட்டில் வரும் மார்ச் 24-25-ல் மண்டல

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும்; ஈரோட்டில் வரும் மார்ச்  24-25-ல் மண்டலதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொது செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்பு லெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுதர்சனம், தா.மோஅன்பரசன், ஆவடி நாசர், சுந்தர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுரேஷ் ராஜன், ஆவுடையப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்பட 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதாக எதிர்பார்க்கப்படுவதால் அதில் தி.மு.க. வெற்றி பெற பிரசார யுக்திகளை வகுப்பது, அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்து சொல்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு அரசு தேவையான உதவிகளை முழுமையாக செய்யாதது பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்லவும் விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள் வருமாறு;
1. 2ஜி வழக்கில் நீதி கிடைத்துள்ளது என்று கூறிய முன்னாள் பிரதமருக்கு பாராட்டு
2. போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சரே பேசி முடித்து வைக்க வேண்டும்
3. அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும்
4. ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்
5. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திண்டாடும் மைனாரிட்டி அரசுக்கு கண்டனம்
6. முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்ப்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் பாராளுமன்ற தேர்வுக்குழு ஆய்வு செய்ய வேண்டும்
7. தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன திருத்த சட்டம் மறு ஆய்வு செய்ய வேண்டும்
8. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்
9. தமிழகத்தின் கடன் சுமையை தீர்க்க நிபுணர்கள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
10. உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் குளறுபடியான மறு சீரமைப்புக்கு கண்டனம்
11. மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லினக்கம் ஆகிய இலட்சியங்களை வலியுறுத்தி மார்ச் மாதம் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாடு.
மேற்கண்டவாறு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாளை இந்தாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை கூடவிருக்கும் நிலையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 07-01-18
Total Visitors : 183
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments