Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  துவரங்குறிச்சி அருகே சுற்றுலா வேன் லாரி மோதல்: 10 பேர் பலி:5 பேர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே சுற்றுலா வேன் லாரி மோதல்: 10 பேர் பலி:5 பேர் படுகாயம்திருச்சி-மதுரை சாலையில் துவரங்குறிச்சி அருகே நின்றுக்கொண்டிருந்த போர்வெல் லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சியை அடுத்த துவரங்குறிச்சியில் நாகர்கோவிலில் இருந்து திருப்பதி சேன்ற சுற்றுலா வேன், நின்றுக்கொண்டிருந்த போர்வெல் லாரி மீது பின்பக்கமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 ஆண்கள், 2 பெண்கள், 3 குழ்நதைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 5 பேர் மேலும் பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சாலை விபத்தில் இறந்தவர்கள் விபரம் - நந்தீஸ், ஜெசந்தியா,நடராஜன்,வைத்தியலிங்கம்,புஸ்கலா,ஈஸ்வரன், தில்லை,சொர்ணம்,ஐயப்பன், சொர்ணகுமார் ஆகியோர் பலியாகியிருக்கின்றனர்.
இன்று அதிகாலை நடந்த விபத்து என்பதாலும், பயங்கரமாக பின்பக்கமாக மோதியதால் வேன் அப்பளம்போல் சுக்கு நூறாகி லாரியோடு ஒட்டிக்கொண்டது. தனியார் கிரேன் சர்வீஸ் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து டெம்போ ட்ராவலரில் இருந்து விபத்துக்குள்ளானவர்களை போலீஸார் மீட்டனர். அதிகாலை என்பதால் விபத்தில் மாட்டிக்கொண்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இந்த விபத்தை குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

  Source : justknow.in
Post Date : 07-12-17
Total Visitors : 139
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments