Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தண்ணீர் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் இல்லா விநாயகர் சதுர்த்தி விழா

தண்ணீர் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் இல்லா விநாயகர் சதுர்த்தி விழா திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக பிளாஸ்டிக் இல்லா விநாயகர் சதுர்த்தி விழா திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் கோலாகலமாக கடைபிடிக்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் பையில் பூஜை பொருட்கள் கொண்டு வரும் பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு துணி பையில் பொருள்களை வைத்து பிளாஸ்டிக் எமன் என்பதை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கி பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொது மக்களிடம் இனி வீட்டிலிருந்து வெளியே வரும் பொழுது துணிப்பையுடன் வாருங்கள் என்று கூறி துணிப்பையை கொடுத்தனுப்பினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்ததோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன், தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் இணைச் செயலர்கள் கி.சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ், வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ், கலைவேந்தன், சென்னை வசந்த் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று துணிப்பைகளை வழங்கி பிளாஷ்டிக் தவிர்ப்போம், பூமியைக் காப்போம் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கொடுத்து திருச்சியில் பிளாஸ்டிக் இல்லா விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர்.

  Source : justknow.in
Post Date : 14-09-18
Total Visitors : 163
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments