Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Justice League (3D) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் ஸ்ரீரெங்கநாராயண ஜீயர் உடல் நல்லடக்கம்:அமைச்சர்கள்-ஜீயர்கள் பங்கேற்பு

 ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் ஸ்ரீரெங்கநாராயண ஜீயர் உடல் நல்லடக்கம்:அமைச்சர்கள்-ஜீயர்கள் பங்கேற்பு ஸ்ரீரங்கம் வடக்கு உத்தரவீதியில் உள்ள ராமானுஜர் மடத்தின் 50-வது பட்டம் ஜீயர் ஸ்ரீரெங்க நாராயண ஜீயர் தனது 89-வது வயதில் நேற்று முன்தினம் மதியம் திருச்சி ஏ.பி.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று மாலை ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம் வடக்கு உத்தரவீதியில் உள்ள ராமானுஜர் மடத்தின் 50-வது பட்டம் ஜீயர் ஸ்ரீரெங்க நாராயண ஜீயர் 1989-ம் ஆண்டு பட்டத்துக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கம் மடத்தில் தங்கியிருந்து ராமானுஜரின் சித்தாந்தத்தை பரப்பி வந்தார். இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆகம ஆலோசகராகவும் இருந்து வந்தார்.
ஸ்ரீரெங்கநாராயண ஜீயருக்கு இருதய கோளாறு மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிறிது காலம் உடல் நலம் குன்றியிருந்தது. இதனையடுத்து அவர் திருச்சி அண்ணாமலைநகரில் உள்ள ஏ.பி.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஸ்ரீரங்கம் வடக்கு உத்தரவீதியில் உள்ள மடத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. சீடர்கள் மற்றும் ஏராளமான உள்ளூர் பக்தர்கள் ஜீயரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று காலை ஜீயரின் உடலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி, திருக்குறுங்குடி, பவுண்டரீகபுரம் ஆஸ்ரமம், கோவை ஜீயர்கள், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா மனோகர், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பிரமுகர்களும், கே.ஏ.எஸ். ராம்தாஸ், மங்கள் அண்ட் மங்கள் மூக்கப்பிள்ளை உள்பட தொழில் அதிபர்கள் மற்றும் திரளான பக்தர்களும் ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று பகல் 12 மணியளவில் ஜீயரின் இறுதிச் சடங்கு நிகழச்சிகள் தொடங்கின. முதலாவதாக ஜீயரின் மறைவை தெரிவிக்கும் சம்பிரதாய சடங்காக பிரம்ம ரதம் எனப்படும் பல்லக்கு ஸ்ரீரங்கம் உத்தரவீதிகளில் வலம் வந்து மடத்தை அடைந்தது. இதனை தொடர்ந்து ஜீயரின் உடலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பூஜா திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் ஜீயரின் பூர்வாஸ்ரம மகன்கள் நாராயணன், திருமலை ஆகியோர் முன்னிலையில் புரோகிதர்கள் உதவியுடன் ஜீயருக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர். திருப்பதி உள்பட முக்கிய வைணவ தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, மரியாதைகள் ஜீயரின் பூத உடலுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
மாலை 3 மணியளவில் ஜீயரின் உடல் அலங்கரிக்கப்பட்டு காவித்துணி போர்த்தப்பட்ட மூங்கில் கூடையில் வைத்து மேளதாளத்துடன், அதிர்வேட்டுகள் முழங்க கொள்ளிடக்கரையில் உள்ள ஆளவந்தார் படித்துறை எனப்படும் கோவில் தோப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குழியில் மாலை 4 மணியளவில் வேதகோஷம் முழங்க ஜீயரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கா, நாராயணா, கோவிந்தா என முழக்கமிட்டபடி ஜீயர் உடல் மீது உப்பு தூவினர்.
இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா ஆகியோர் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், கைங்கர்யபரரர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 88
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments