Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்பு

பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்புதிருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயன்பெருமாறு கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேதுராப்பட்டி கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. அனைத்து விதமான கட்டிட பணிகளும் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. 2018 -19-ம் கல்வியாண்டில் +2 தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ வகுப்பில் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் மே 14-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை இக்கல்லூரியில் வழங்கப்பட உள்ளது.
இதர பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்தி நேரடியாக விண்ணப்பம் பெறலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகலை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 1ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில அமைப்பியல் 32, இயந்திரவியல் 20, மின்னியல் 23, மின்னணுவியல் 37, கணிப்பொறியியல் 52 என 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 164 இடங்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு பாலிடெக்னிக் முதல்வரை 9443720499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரசு பாலிடெக்னிக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 17-05-18
Total Visitors : 85
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments