Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனைகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி), மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் (காங்கிரஸ்), சதிஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), ஜே.பி.யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்), திருச்சி சிவா (தி.மு.க.), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), தானிஷ் அலி (மதசார்பற்ற ஜனதாதளம்), அனில் அன்வர் அன்சாரி (போட்டி ஐக்கிய ஜனதாதளம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை தோற்கடிக்கும் விதமாக வியூகம் வகுப்பதை உறுதி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த துணைக் குழுக்களை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:–
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த மாற்றத்தை கொண்டு வருவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மீராகுமார், கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட்டது பாராட்டுக்குரியது. வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடிவேண்டிய நிலையும் அவர்கள் ஜனநாயக கொள்கை நெறிமுறைகளை காப்பாற்றுவதற்காக போட்டியிட்டதை பாராட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

  Source : justknow.in
Post Date : 12-08-17
Total Visitors : 11
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments