Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தமிழநாடு சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத் திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் திமுக வழக்கு

தமிழநாடு சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத் திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் திமுக வழக்குசட்டசபையில் உள்ள ஜெயலலிதாவின் உருவப் படத்தை அகற்றக்கோரி தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று என் கட்சிக்காரர் எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த நிலையில், அவசர அவசரமாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. சட்ட சபையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அகற்றக்கோரி என் கட்சிக்காரர் புதிய வழக்கை தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கை செவ்வாய்க் கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் கே.பாலு எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அவர், ‘ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரசின் நலத்திட்டத்தில் இடம் பெறக்கூடாது என்று நான் தொடர்ந்த வழக்கு கடந்த ஜனவரி 29-ம் தேதி தங்கள் (நீதிபதிகள்) முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது எங்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால், அந்த வழக்கு எங்களுக்கு தெரியாமலேயே தள்ளி வைக்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது அரசு பிளடர் ராஜகோபால் குறுக்கிட்டு, இது தவறான தகவல். அரசு வக்கீல்கள் யாரும், வழக்கை தள்ளி வைக்க கோரவில்லை’ என்றார்.
இதற்கு நீதிபதிகள், ‘வழக்கை தள்ளி வைக்க கேட்டால், எதிர்தரப்பின் கருத்தை கேட்ட பின்னரே, அந்த கோரிக்கையை நாங்கள் ஏற்போம்’ என்று கருத்துக்கூறி, கடந்த 29-ம் தேதியிட்ட வழக்கு விவரப்பட்டியலை எடுத்து சரிபார்க்கும்படி நீதிமன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அந்த அதிகாரிகள், ஆவணங்களை சரிபார்த்து, ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்ற கோரிக்கையுடன், ஜெ.அன்பழகன், கே.பாலு, டிராபிக் ராமசாமி உள்பட பலர் பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அதில், டிராபிக் ராமசாமி தரப்பு வக்கீல், வழக்கை தள்ளி வைக்க கோரியுள்ளார். அதனால், எல்லா வழக்குகளும் பிப்ரவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்குகள் எல்லாம் வருகிற 16-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அந்த வழக்குகளை அவசரமாக முன்கூட்டியே விசாரிக்க தேவையில்லை’ என்றார்கள்.
பின்னர், ‘இனிமேல் விசாரணைக்கு வரும் வழக்குகளை வேறு தேதிக்கு தள்ளிவைக்க கோரினால், எதிர்தரப்பினருக்கு முதலில் தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்பின்னரே, எங்களிடம் (நீதிபதிகளிடம்) முறையிட வேண்டும்’ என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினார்கள்.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக்கோரி ஜெ.அன்பழகன் சார்பில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

  Source : justknow.in
Post Date : 13-02-18
Total Visitors : 51
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments