Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Ippadai Vellum Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 நபர்களுக்கு ரூபாய் 4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 நபர்களுக்கு ரூபாய் 4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 53 நபர்களுக்கு ரூ.4,63,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூபாய் 5000 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி மற்றும் 14 நபர்களுக்கு மனவளர்ச்சி குன்றியோர்க்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூபாய் 1500க்கான ஆணையினையும், எரகுடி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி மைய பணியாளராக பணிபரிந்து பணியிடைக்காலமானபூங்கோதை என்பவரது வாரிசுதாரும், மகனுமான ஜி.மணிகண்டன் என்பவருக்கு எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் கருணையடிப்படையில் பணிநியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையாக, 13 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000 வீதம், ரூபாய் 12 ஆயிரத்திற்கான ஆணையினையும், ஒரு நபருக்கு கணவரால் கைவிடப்பட்டோருக்கான மாதம் ரூபாய் 1000 வீதம், ரூபாய் 12 ஆயிரத்திற்கான ஆணையினையும், 4 நபர்களுக்கு விதவை உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000 வீதம், ரூபாய் 12 ஆயிரத்திற்கான ஆணையினையும், 18 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000 வீதம், ரூபாய் 12 ஆயிரத்திற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து, மணப்பாறை, பெரிய அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அந்தோணி அளித்த மனுமீது மாவட்ட ஆட்சித்தலைவர் மூன்று சக்கர பெட்ரோல் கூட்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து ரூபாய் 58,840 மதிப்பிலான மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி மாற்றுத்திறனாளி அந்தோணிக்கு வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் தொடர்பான மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 136
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments