Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பொன்மலை வார சந்தையில் புதிய கட்டணத்தை வியாபாரிகள் ஏற்க மறுப்பு; இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

பொன்மலை  வார சந்தையில் புதிய கட்டணத்தை வியாபாரிகள் ஏற்க மறுப்பு; இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைதிருச்சி பொன்மலை ரயில்வே இடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும், மற்ற நாட்களில் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் பெருமளவில் இங்கு கடை போடுவது வழக்கம். டீக்கடை, பழக்கடை, இறைச்சிகடை உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட கடைகள் போட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெறும்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே நிர்வாகம் பொன்மலை சந்தையை தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டது. இதனால் தரைக்கடை ஒன்றுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்து அங்கு கடை நடத்தும் வியாபாரிகளுக்கான கட்டணம் கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் வசூலிக்கப்பட உள்ளதாக வாடகை கட்டணங்கள் அடங்கிய நோட்டீஸ் மற்றும் அறிவிப்பு பலகை (ஜூன் 3ம்தேதி) வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து வியாபாரிகள் கட்டண தொகையை திரும்ப பெறக்கோரி கடந்த மாதம் 8 முதல் 10ம் தேதி வரை பொன்மலை சந்தையில் கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனை த்து கட்சிகள் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டது. எம்பி குமார் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் திருச்சி கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டியை நேரில் சந்தித்து வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து தினசரி கடைகளுக்கு ரூ.200ல் இருந்து ரூ.25கட்டணம் குறைத்து ரூ.175 வசூலிக்கும் படியும், நேற்று (11ம் தேதி) முதல் 6 மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம் என தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது.
அதன்படி, தரைக்கடை வியாபாரிகளுக்கு (வாரச்சந்தை) ரூ.175, தலைசுமை வியாபாரிகளுக்கு ரூ.20, கம்பி கேட் சந்தை மற்றும் தினசரி கடைகள் ரூ.100, இருசக்கர வியாபாரிகள் ரூ.30, 3 சக்கர வியாபாரிகள் ரூ.40, அனைத்து வகையான வண்டிகள் ரூ.50, 4 சக்கர வாகன விற்பனையகம் ரூ.150, பிரசார வாகனங்கள் ரூ.200, கனரக வாகன வியாபாரிகள் ரூ.300, டிரைலர் வாகனம் ரூ.500, இருசக்கர வாகனம் ரூ.5, கார் ரூ.10 என புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, புதிய கட்டணம் தரமுடியாது என்றனர். இதனால் வாடகை வசூலிக்க வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஓஎப்டி, பெல் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான இடத்தில் வாரசந்தை இயங்கி வருகிறது. இங்கு தரைக்கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. ஆனால் பொன்மலை சந்தைக்கு ரூ.175 என்பது அதிகமானதாகும். இது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்ட மைப்பு நிர்வாகிகள், தனியார் ஒப்பந்ததாரர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடை பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகளுக்கு சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மீண்டும் தொடர்ந்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 59
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments