Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவுகடந்த 26-ம் தேதி, கௌகாத்தியிலிருந்து வந்த ரயிலில் இருந்த பிரதீப், கமல் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்களிடமிருந்த ஆறு கைத்துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், ரூ.4 லட்சம் (2 ஆயிரம் ரூபாய்) கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்களை புழல் சிறையில் இருக்கும் ரபீக் இயக்கியதாகக் கூறப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின்படி, திருச்சி ஃபெமினா ஹோட்டலில் பதுங்கியிருந்த, சென்னையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் பரமேஸ்வரன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்து, பட்டுக்கோட்டை சிவா, வில்லிவாக்கம் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 2 கள்ளத்துப்பாக்கிகளும், 10 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், காவலர் பரமேஸ்வரன் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததும், இந்தக் கும்பல், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சமூக விரோதிகள் ஆகியோருக்கு, கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவிட்டார்.
அதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணை அதிகாரி பிரவீன் அபினவ் தலைமையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையைத் துவக்கினர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த எட்டப்பன், கலைசேகரன், சென்னையைச் சேர்ந்த திவ்ய பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே சி.பி.சி.ஐ.டி போலீஸார், கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அதையடுத்து, கைதான 6 பேர் நேற்று திருச்சி ஜே.6 குற்றவியல் நீதித்துறை நடுவர் ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அரசு வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் கைதான சிவா, கலைசேகரனின் வழக்கறிஞர்கள் கந்தபழனி, சந்தீப்நாத் ஆகியோர் ஆஜரானார்கள். கைதானவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட திருச்சி ஜே.6 குற்றவியல் நீதித்துறை நடுவர் ஷகிலா, காவலர் பரமேஸ்வரன், நாகராஜன், சிவா, திவ்ய பிரபாகரன் ஆகியோருக்கு 5 நாள்களும், எட்டப்பன், கலைசேகரன் ஆகியோருக்கு 8 நாள்களும் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். விசாரணையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Source : justknow.in
Post Date : 07-02-18
Total Visitors : 107
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments