Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பெரம்பலூர் பியூட்டி பார்லர் விவகாரம்; திமுக பிரமுகர் கைது; கட்சியில் இருந்து நீக்கம்

பெரம்பலூர் பியூட்டி பார்லர் விவகாரம்; திமுக பிரமுகர் கைது; கட்சியில் இருந்து நீக்கம்பெரம்பலூர் பியூட்டி பார்லரில் அடிதடி நடத்திய திமுக பிரமுகர் போலீஸார் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த அடிதடி சம்பவம் சமூக ஊடகங்களில் வெளிவர ஒரே நாளில் கைதும், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதும் பரபரப்பாக பேசப்படுகின்றது.
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சத்தியா செல்வகுமாரிடம் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்பதால் அடிக்கடி சென்று கேட்டு வந்துள்ளார்.
சத்யா பியூட்டி பார்லர் நடத்திவரும் அதே பாரதிதாசன் நகரில் செல்வகுமாரும் பர்னிச்சர் கடை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகின்றார். சத்யா-செல்வகுமார் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை அடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்வகுமார் சத்யா பியூட்டி பார்லருக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட அதுவே கைகலப்பாகவும் மாறிவிட்டது.
இதுதொடர்பாக சத்தியா பெரம்பலூர் காவல் நிலையத்தை அனுகி செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கூறியதாகவும் அதற்கு 4 மாத காலமாக எந்தவித நடவடிக்கையையும் போலீஸார் எடுக்கப்படவில்லை என சத்யா தரப்பு போலீஸார் மீது குற்றம்சாட்டி தனது பியூட்டி பார்லரில் உள்ள கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் நேற்று.
நாடெங்கும் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வர பெரம்பலூர் காவல்துறையும் தூசி தட்டி துரிதமாக செயல்பட்டு செல்வகுமாரையும் கைது செய்து மார்தட்டிக்கொண்டுள்ளது தற்போது.
4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன்? என்ற கேள்விக்கான பதில் சத்யாவுக்கு மட்டுமே தெரியும்.
இந்தநிலையில், பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 13-09-18
Total Visitors : 140
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments