Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Justice League (3D) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கர்நாடகாவில் பாஜக முன்னிலை: தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை நீட்டும் கட்சியே கர்நாடக அறியனையை அலங்கரிக்க வாய்ப்பு

கர்நாடகாவில் பாஜக முன்னிலை: தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை நீட்டும் கட்சியே கர்நாடக அறியனையை அலங்கரிக்க வாய்ப்புகர்நாடக சட்டமன்றத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாகியிருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகின்றது. காங்கிரஸ் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் பாஜக-காங்கிரஸ் கட்சிகளுக்கு போட்டியாக மதசார்பற்ற ஜனதாதளமும் முன்னிலையில் இருந்து வருகின்றது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் குமாரசாமியின் மஜத கட்சி 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 35 இடங்கள் கன்பார்ம் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும், பிந்தைய கருத்து கணிப்புகளிலும் தொங்கு சட்டசபை அமையும் என்றும் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டன.
அதுபோல் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 35 இடங்கள் கட்டாயம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் 35 இடங்களில் வெற்றி பெற்றால் அக்கட்சி யாருடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவிக்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்றைய தினம் மஜதவின் நிலை குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று கூறியுள்ளார். அதே போல் காங்கிரஸுக்கு ஆதரவு உண்டு, ஆனால் முதல்வர் சித்தராமையாவாக இருக்கக் கூடாது என்பதே இவர்களது கோரிக்கையாகும். மதச்சார்பற்ற ஜனதாதளம் 30 தொகுதிகளுக்கு மேல் லீடிங்கில் உள்ளது. இதனால் கெளடா கட்சியைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சியமைக்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே தேவெ கெளடா மற்றும் குமாரசாமி கை காட்டும் நபர்தான் முதல்வராக முடியும். இதற்கிடையே பாஜகவின் எடியூரப்பா 17-ம் தேதி பதவியேற்பு விழாவுக்காக கான்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்
பாஜக - 107

காங்கிரஸ் - 67

ம.ஜ.தளம் - 45

மற்றவை - 0

மொத்தம் - 221/222

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 206
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments