Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பா.ஜனதா ‘பார்முலாவை’ கையிலெடுத்த காங்கிரஸ்: ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது; காங்.க்கு துணை முதல்வர் பதவி

பா.ஜனதா ‘பார்முலாவை’ கையிலெடுத்த காங்கிரஸ்: ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது; காங்.க்கு துணை முதல்வர் பதவிகர்நாடக சட்டமன்றத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின் தள்ளி பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்குப்பின் கூட்டணி வைத்து முதல்வர் பதவியை ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் விட்டுத்தர முடிவெடுத்ததால் பாஜக தனித்து பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவுகின்றது.
கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை ஒன்பது மணி வாக்கில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கிய நிலையில், பாஜக தனிப் பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆர்.ஆர்.நகர், ஜயநகர் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர 222 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து வெற்றி தோல்விகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், பா.ஜனதா கட்சி 104 இடங்களில் முன்னிலை பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை 112-ஐ எட்டவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கைகோர்த்தால் ஆட்சி அமைக்கும் பலமான 112-ஐ தாண்டிவிடலாம். கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா பின்பற்றிய பார்முலாவையே இப்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியை அமைத்துவிட காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர்கள் இடையே உச்சக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் காங்கிரஸ், முதல்-மந்திரி பதவியையே விட்டுக்கொடுக்க முன்வந்து உள்ளது. பா.ஜனதாவினர் வெற்றியை கொண்டாடிவரும் நிலையில் காங்கிரஸ் புதிய திட்டத்தை முன்னெடுத்து உள்ளது அரசியல் அரங்கில் பெரும் வியூகத்தை மீண்டும் எழுப்பி உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி நடவடிக்கையை எடுத்திருப்பது வெளிப்படையாக தெரியவந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு கோரும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்கள் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசரக்கூட்டத்தை சற்றுமுன்பு கூட்டினர். அதன் வெளிப்பாடாக கர்நாடகா ஆளுநர் ஜேடிஎஸ் கட்சிக்கு அழைப்பு விடுப்பதை தவிர்த்து ஆளுநர் மாளிகையின் கதவுகளை மூடிவிட்டாராம்...

மொத்தம்- 222/222
முன்னிலை
பாஜக- 104
காங்கிரஸ்- 78
மஜத- 37
மற்றவை- 4

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 184
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments