Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  அம்பேத்கரின் 61-வது நினைவு தினம்: திருச்சியில் அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அம்பேத்கரின் 61-வது நினைவு தினம்: திருச்சியில் அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்புடாக்டர் அம்பேத்கரின் 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு தி.மு.க., காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சிகளின் சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் மாநகராட்சி துணமேயர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜன், ரெக்ஸ், வில்ஸ் முத்துக்குமார், சார்லஸ் ஆகியோரும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட தலைவர் தங்க.ராஜய்யன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் திருச்சி மாநகர், மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல், வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் குணா ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் கட்சியினரும் மாலை அணிவித்தனர்.
இதே போன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினரும், மக்கள் மறுமலர்ச்சி கழகம், அகில இந்திய சட்ட உரிமை கழகம், திருச்சி கோட்ட காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  Source : justknow.in
Post Date : 07-12-17
Total Visitors : 106
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments