Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தூய்மை திருச்சி தீபம்; 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றிய யுகா அமைபினர்

தூய்மை திருச்சி தீபம்; 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றிய யுகா அமைபினர்தூய்மை திருச்சியினை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் யுகா பெண்கள் அமைப்பின் இன்னும் ஒரு முயற்சியாக 'தூய்மை திருச்சி தீபம்' என்ற வகையில் திருச்சி மாநகரை தூய்மை மாநகரமாக பாதுகாக்கும் விதமான நிகழ்ச்சியாக மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் 10 ஆயிரம் அகல்விளக்குகள் ஏற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
வரவிருக்கும் தீபாவளியினை மாசில்லா தீபாவளியாகவும், தூய்மை தீபாவளியாகவும் கொண்டாட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக யுகா பெண்கள் அமைப்பு 'தூய்மை திருச்சி தீபம்' என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் நடத்தியது.
திருச்சி மாநகரம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை கொண்ட மாநகரம். மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையும், அதனைச்சார்ந்த தெப்பக்குளம் பகுதி முழுவதும் சுற்றுப்புறத் தூய்மையினைப் பேணிகாக்க வலியுறுத்தும் விதமாகவும், நீர்நிலைகளை குப்பைகள் இன்றி பாதுகாக்கவும், மாசு படுத்தாமல் பயன்படுத்த வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது.
தொடர்ந்து இந்தியாவின் தூய்மைநகரங்கள் பட்டியலில் திருச்சி இடம் பெற வேண்டுமானால் மாநகரை இன்னும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டு என்பதனால் யுகா அமைப்பு இதுபோன்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மாணவ-மாணவிகளுடன் கைகோர்த்து செய்து வருகின்றது.
இவர்களின் விழிப்புணர்வு பயணங்களில் மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் தொடர்ந்து கைகோர்த்து வருகின்றனர்.
திருச்சி தெப்பக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மீனா, மலைக்கோட்டை உதவி ஆணையர் விஜயராணி, யுகா பெண்கள் அமைப்பின் தலைவர் அல்லிராணி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்துக்கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் தெப்பக்குளமெங்கும் அகல்விளக்கேற்றினர். பின்னர் பெருமைவாய்ந்த மலைக்கோட்டை தெப்பக்குளம் மற்றும் நீர்நிலைகளை குப்பைகள் போடாமல் பாதுகாக்கவும், மாசுபடுத்தாமல் பயன்படுத்தவும் உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக்காட்டினர்.
திருச்சியின் தூய்மையினை பேணிகாப்பது அனைவரது கடமை என்பதனை உணர்ந்து இத்தீபாவளி பண்டிகையினை மாசில்லா தீபாவளியாக கொண்டாடவும், சுற்றுப்புறத்தையும், சுற்றுச்சூழலையும் நீர்நிலைகளை நமது நலனுக்காக பேணிகாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

  Source : justknow.in
Post Date : 10-10-17
Total Visitors : 57
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments