Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு; காங். எம்.எல்.ஏ., விஜயதாரணி வரவேற்பு

கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு; காங். எம்.எல்.ஏ., விஜயதாரணி வரவேற்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று காலை திறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி இந்தப்படத்தை சபாநாயகர் தனபால் பேரவையில் திறந்து வைத்தார்.
ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழாவுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் தலைமைதாங்கினர். இதன்மூலம், பேரவையில் திறக்கப்படும் 11-வது தலைவர் புகைப்படம் இதுவாகும். விழாவில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். இதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர், தி.மு.க-வினர் அமரும் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். சரியாக 7 அடி உயரம், 5 அடி அகலத்தில் ஜெயலலிதா உருவப்படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். இந்த உருவப்படம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமரும் இருக்கைக்கு எதிரே, நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் உருவப்படத்தை பேரவையில் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல, உருவப்படத்தை திறக்கக்கூடாது என தி.மு.க சார்பில் பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-வும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் கொறடாவுமான விஜயதாரணி, ஜெயலலிதா உருவப்பட திறப்புக்கு வரவேற்பு தெரிவித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பேரவையில் முதல் முறையாக ஒரு பெண் உருவப்படம் திறப்பதை நான் வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவர், படத் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 13-02-18
Total Visitors : 39
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments