Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால் எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்ய மறுக்கின்றனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால் எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்ய மறுக்கின்றனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுபெண்பத்திரிகையாளரை இழிவாக பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரமாக சுற்றித்திரிந்து வரும் எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் உலா வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் தனபால் நடிகர் எஸ்.வி.சேகர் பிரச்சனைக்கு வரும் 20-ம் தேதி வரை பொறுத்து இருக்குமாறும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகர் குறித்து மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், பெண்பத்திரிகையாளரை தரக்குறைவாக நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்து உள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தலைமை செயலாளரின் உறவினர் சேகர் என்பதால் கைது செய்ய அரசு தயக்கம் காட்டுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் காவல்துறையை கேள்வி கேட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் சேகர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். காவல் அதிகாரிகள் முன்னிலையில் டிவி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்தார் என்றும் கூறியுள்ளார்.

  Source : justknow.in
Post Date : 13-06-18
Total Visitors : 59
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments