Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  இன்று "உலக மக்கள் தொகை தினம்" - "குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி"

இன்று "உலக மக்கள் தொகை தினம்" - "குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி"உலக மக்கள் தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலக மக்கள் தொகை தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.
இந்த நாள் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் 2018 ஆண்டிற்கான தீம் "குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை". முதன் முறையாக 1989 ஆம் ஆண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆளும் குழு 1987 ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகை எண்ணிக்கையின் காரணமாக இதை தொடங்கி வைத்தது. அப்போது மக்கள் தொகை ஏற்கனவே 5 பில்லியனைத் தாண்டிவிட்டது, பெருகி வரும் உலக மக்கள்தொகை உண்மையில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணியாக இருந்தது. எனவே, இந்த நாள் பெருகிவரும் மக்கள் தொகை பிரச்சினையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது. 2018-ல் உலக மக்கள் தொகை 7.6 பில்லியனைத் தாண்டிவிட்டது. ஒரு நொடிக்கு ஒரு குழந்தை பிறப்பும், அதே ஒரு 2 நொடிகளுக்கு ஒரு இறப்பும் இன்றய நிலையில் உலகளவில் இருக்கின்றது.
இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-ன்படி 132. 42 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகி விட்டது. உலக மக்கள் தொகையும் வரும் 2030 -ம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.
2018 உலக மக்கள் தொகை தினத்தின் பல முக்கிய அம்சங்கள்:
1. இந்த நாள் இளம் ஆண், பெண் இருவரையும் வலுப்படுத்தவே கொண்டாடப்படுகிறது.
2. இளம் வயதிலேயே அவர்களுக்கு தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கு சரியான வழிமுறைகளைப் பற்றி கற்பிக்க வேண்டும்.
3. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
4. சமூகத்தில் இருக்கும் பாலின முரண்பாடுகளை அகற்ற மக்களுக்கு கற்றுக்கொடுத்தல்
5. பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் அவை எப்படித் தடுக்கப்படலாம் என்பதைப் பற்றி கற்பித்தல்.
6. ஒவ்வொரு ஜோடிகளுக்கும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.
7. ஒரு பெண் குழந்தையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான சில சட்டங்களைக் கோருதல்.
8. பாலியல் பற்றிய அறிவை வழங்குவது மற்றும் திருமணங்களுடன் வருகின்ற பொறுப்புகளை ஒருவர் உணர்கின்ற வரை, திருமணத்தை தொடர்ந்து தள்ளிவைப்பது.

  Source : justknow.in
Post Date : 11-07-18
Total Visitors : 139
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments