Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  7-வது நாளாக போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டம்; இன்று தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிட்டனர்

7-வது நாளாக போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டம்; இன்று தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிட்டனர்தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கடந்த 4-ம் தேதி முதல் தங்களது வருங்கால வைப்பு நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை வழங்கக்கோரியும், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று 7-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் செய்து வருகிறார்கள்.
போக்குவரத்துத்துறை அமைசருடன் 23 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்கின்றனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கை விட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் மீண் டும், மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
ஏழை தொழிலாளர்களிடம் பல்லாயிரம் கோடி பணத்தை ஏமாற்றிய அரசின் கோரிக்கைகளை போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறை வேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பேருந்து தொழிலாளர்கள் நேற்று தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது தொமுச சண்முகம் கூறியதாவது; பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தர முடியாது என்பது சட்டப்படி குற்றம் .போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு முறையான தீர்ப்பு வழங்க வேண்டும். பொங்கல் பேருந்துகளை இயக்க எங்களுக்கும் விருப்பம்தான், ஆனால் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தர முடியாது என்பது சட்டப்படி குற்றம் என கூறினார்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 75
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments