Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம்

விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம்திருச்சி உறையூர் ராமலிங்க நகர் ஞானம் காலனியில் உள்ள விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் மழலையர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ராமலிங்கநகர், உறையூர், சீனிவாசாநகர் பகுதிகளில் உள்ள சிறுவர்-சிறுமியர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த புதிய ஆண்டு குழந்தைகளுக்கு நேர்மறை பார்வை மற்றும் மகிழ்ச்சி நிறைவாக கிடைத்திடவும், குழந்தைகளே எதிர்கால தலைவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும், அவர்களுக்கான பொறுப்புகளையும் உணரச்செய்து, குழந்தைகள் செய்யும் சிறிய செயல்களையும், குறும்புகளையும் முதலில் பாராட்டி அவற்றில் உள்ள பிழைகளை பின்னர் எடுத்துக்கூறி மகிழ்ச்சியை பகிர்ந்தாலே போதும், குழந்தைகள் புத்துணர்ச்சி பெற்று நன்னெறிகளோடு தங்களது பயணத்தை தொடர்வார்கள் என சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட டால்மியா பள்ளி ஆசிரியையும் விவிட் மாண்டசரி பள்ளியின் ஆலோசகருமான ரேவதி மற்றும் ஆசிரியை லலிதா ஆகியோர் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து மழலையர்களுடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் அனைவரும் புத்தாண்டு குறித்து வரைந்த ஓவியங்கள் காட்சி படுத்தப்பட்டது. அவற்றில் சிறந்த ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி கமல சரஸ்வதி, கல்பனா பாலாஜி, ஓவியப் பயிற்சி ஆசிரியர் போர்ஷியா ஆகியோர் செய்திருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 94
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments