Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக்

ஜாஸ் சினிமா கைமாறல் குறித்து விவேக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை; வருமானவரித்துறையினர் கேள்விகளுக்கு விலாவாரியாக பதிலளித்தேன் - ஜெயா டிவி விவேக்தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறி வைத்து கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட மெகா ரெய்டில் முக்கியமானதாக கருதப்பட்ட ஜெயா டி.வி., மற்றும் ஜாஸ் சினிமா கம்பெனி அலுவலகங்களிலும், அதன் சி.இ.ஓ., விவேக் வீட்டிலும் சோதனைகளை வருமானவரித்துறை அதிகாரிகள் இறுக்கினர். இதில் பல்வேறு கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டில் கைப்பற்றதாக கூறப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும், அதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்ததும் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். மேலும் போலி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு சுமார் ரூ.1200 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஜாஸ் சினிமாஸ் குறித்து விவேக் 2 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவில், ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகள் கைமாறியது எப்படி? ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகளும் விற்பனை செய்யப்பட்டனவா? அல்லது குத்தகைக்கு விடப்பட்டனவா? என்பது குறித்து விவேக் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் சினிமாஸுக்கு திரையரங்குகள் விற்பனை செய்தது தொடர்பாக சத்யம் நிறுவனமும் ஆவணங்களைத் தாக்க செய்யவும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதலில் ஐந்து நாள் வருமானவரித் துறை சோதனையின் போது மழையில் காத்திருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள், ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்தேன்.
வருமானவரித்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டில் மட்டுமல்லாமல் எங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலும் சோதனை நடத்தினர். ஜெயா டி.வி.யையும், ஜாஸ் சினிமா நிறுவனத்தையும் கிட்டத்தட்ட 2 வருடமாக கவனித்து வருகிறேன். ஜெயா டி.வியை மார்ச் மாதம் முதல் பார்த்து வருகிறேன். ஜாஸ் சினிமா நிறுவனத்தில் 2017-ல் இருந்து நான் சி.இ.ஓ.வாக இருந்து வருகிறேன்.
வருமான வரித்துறையினர் 5 நாள் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி என்னிடம் கேட்டார்கள். அவை அனைத்துக்கும் நான் விலாவாரியாக பதில் சொல்லி உள்ளேன். எனது மனைவிக்கு திருமணத்தின் போது போட்ட நகைகள் பற்றி கேள்வி கேட்டார்கள். அந்த நகைகள் அனைத்துக்கும் நான் கணக்கு வைத்துள்ளேன். கண்டிப்பாக இன்னும் 2, 3 நாளில் வருமான வரித்துறையினரிடம் அதை சமர்ப்பித்து விடுவேன். வருமான வரித்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர்.
எனது டூட்டி பதில் சொல்லவேண்டியது. அதை சொல்லி விட்டேன். இதை தவிர்த்து அடுத்து கொஞ்ச நாள் அல்லது சில மாதத்தில் திரும்ப என்னை விசாரணைக்கு கூப்பிடுவார்கள். விசாரணை சமயத்தில் என்னென்ன கேள்வி கேட்பார்களோ அதற்கு பதில் சொல்வேன்.
கே:- உங்கள் வீட்டில் என்ன எடுத்தார்கள்? எதை கைப்பற்றினார்கள்?
ப:- கம்பெனி சம்பந்தமாக சில பொதுவான ஆவணங்களை பார்த்து எடுத்தார்கள். சில கணக்கு வழக்குகளை வைத்து கேள்வி கேட்டார்கள். சினிமா நிறுவனம், வினியோகஸ்தர்களின் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்டவை குறித்தும் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் தெரிவித்தேன். இதை தவிர்த்து எனது மனைவியின் நகைகள் பற்றித்தான் கேள்வி கேட்டனர். வேறொன்றும் இல்லை.
கே:- ரூ.500 கோடி அளவுக்கு ஜெயா டி.வி.யில்...?
ப:- நான் நிருபர்களுக்குக்கு பேட்டி கொடுக்க இங்கு வரவில்லை. மிகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மரியாதை நிமித்தமாக சில விளக்கங்களை சொல்வதற்காக உங்களை சந்திக்கிறேன்.
எனவே சந்தேகமான கேள்விகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை.
யார் தப்பாக பணம் சம்பாத்தியம் செய்திருந்தாலும், அவர்கள் வருமான வரித்துறைக்கு வரிகட்டியாக வேண்டும். யார் தப்பு பண்ணியிருந்தாலும், அது நானாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும் அல்லது ஒரு மந்திரியாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து யூகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

  Source : justknow.in
Post Date : 14-11-17
Total Visitors : 156
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments