Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் சென்னைக்கு மாற்றம்; திருச்சி மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் சென்னைக்கு மாற்றம்; திருச்சி மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் உள்பட தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர் காவல்துறை ஆணையராக இருந்த அமல்ராஜ் ஐபிஎஸ் அங்கிருந்து மாற்றப்பட்டு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் திருச்சியில் இருந்து மாற்றப்பட்டு சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா ஐபிஎஸ், கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக இருந்த வெங்கட்ராமன் ஐபிஎஸ், அங்கிருந்து மாற்றப்பட்டு ஐஜி நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த ஐஜி தினகரன் ஐபிஎஸ், எஸ்டாபிளிஷ்மெண்ட் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் இருந்த சோனல்.வி.மிஸ்ரா காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச எஸ்பியாக இருந்த அமானட்மன் , தமிழக பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
திருச்சிக்கு மாநகர காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டிருக்கும் அமல்ராஜ் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பயின்றவர் என்பதும், ஏற்கனவே திருச்சி சரக ஜ.ஜியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 14-11-17
Total Visitors : 107
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments