Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்பு

திருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்புதிருச்சி மயிலாடுதுறை இடையே தினமும் 1 எக்ஸ்பிரஸ் மற்றும் சில பாசஞ்சர் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் பயணிகளின் கூட்டம் எப்போதுமே அலைமோதும். பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதாலும், போக்குவரத்து நெரிசலால் நீண்டநேரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும், பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புவது வாடிக்கையான ஒன்று.
இந்தநிலையில் திருச்சி-மயிலாடுதுறைக்கு கடந்த 1 வருடத்திற்கும் மேலாக மதிய வேளையில் செல்லும் பாசஞ்சர் ரயில், ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலான திருச்சி-மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும், ரயில் பயணிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நெல்லையில் இருந்து மயிலாடுதுறை வரை வரக்கூடிய பாசஞ்சர் ரயில் திருச்சியோடு ரத்து செய்யப்படுவதாக அடிக்கடி வரும் அறிவிப்பால் மதுரையில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த வழித்தடத்தில் எல்லா நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்ட வேண்டும், ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி இந்த ரயில்களை அடிக்கடி ரத்து செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு திருச்சி-மயிலாடுதுறை மார்க்கத்தில் தினந்தோறும் பயணிக்கக்கூடிய பொதுமக்கள், ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெக்கான் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாரதராஜா, திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு என சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்த வழித்தடங்களில் கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், விவசாயிகள் என பெருந்திரளானோர் தினமும் சென்று வருவது வழக்கமான ஒன்று. பேருந்துக்கட்டண உயர்வு, சாலை பயண நேரம் அதிகம் என்பதால் பெரும்பாலான பொதுமக்களும் இந்த ரயில்களை நம்பியே பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டம் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க திருச்சி-மயிலாடுதுறை வரை செல்லக்கூடிய ஒரு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 3 பாசஞ்சர் ரயில்களையும் மாதத்திற்கு 20 நாட்கள் திருச்சி-மயிலாடுதுறை வழித்தடத்தில் பராமரிப்பு பணி எனக் காரணம் காட்டி ரத்து செய்து விடுகின்றனர். அதே வழித்தடத்தில் தான் திருச்சி சென்னை சோழன் விரைவு வண்டியும், ராமேஸ்வரம்-சென்னை விரைவு வண்டியும், திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு வண்டி, மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தியும் தினமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த ரயில்களையும் இதே காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருக்குமேயானால் பணி பராமரிப்பு உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மாறாக மதியம், காலை, மாலை என பயணிக்கக்கூடிய திருச்சி-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்களையும் ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும் மட்டும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் ரத்து செய்வது பொதுமக்களை ஏமாற்றும் வேலையாகத்தான் இருக்கின்றது என்றார்.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 210
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments