Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Ippadai Vellum Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீசிவானந்தா பாலாலயா பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

ஸ்ரீசிவானந்தா பாலாலயா பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழாநாடெங்கும் தற்போது குழந்தைகளும், சிறுவர்களும் வளர்ந்து விட்ட விஞ்ஞானத்தால் உலகையே தங்களது கைக்குள் வைத்துக்கொண்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவருமே குறுகிய வட்டத்தில் தங்களது கைக்குள் அடங்கிய அலைபேசிகள் மற்றும் வீட்டில் உள்ள கணிப்பொறிகளுடனே தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர்.
குழந்தைகள் கேண்டி கிரிஷ், டெம்பிள் ரன், ஆங்க்ரி போர்ட் என தங்களது எண்ணத்தை குறுக்கிக்கொண்டு விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் திருச்சி ராமலிங்க நகர் 2-வது குறுக்குத்தெருவில் இருக்கும் ஸ்ரீசிவானந்தா பாலாலயா பள்ளியில் மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவுகூறும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
எதிர்வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு நம் பாரம்பரிய விளையாட்டை அப்பள்ளியில் மாணவர்கள் தொடங்கினர். மண்வாசனை என்ற பெயரில் இந்த விளையாட்டானது சிவானந்தா பாலாலய பள்ளி வளாகத்தில் தாளாளர் மற்றும் முன்னாள் ஜெனரல் பாபு தலைமையில் துவங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.
இந்த பள்ளியில் மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளான கொக்கு பற பற, கோழி பற பற, ஒரு குடம் தண்ணி ஊற்றி, ஒரு பூ பூத்ததாம், கண்ணா மூச்சி ரே ரே, காதடச்சான் ரே ரே, குலை குலையாய் முந்திரிக்கா நரியை நரியை சுற்றி வா எனப் பாட்டுப் பாடி பல்வேறு விளையாட்டினை விளையாடினார்கள்.
நாளடைவில் பாரம்பரிய விளையாட்டுகள் வழக்கொழிந்து விட்ட நிலையில், இளைய சமுதாயத்தினர் இவ்விளையாட்டை அறிந்து கொள்ளும் விதமாக ஒத்தையா? இரட்டையா? சாக்கு ஓட்டம், தவளை ஒட்டம், பல்லாங்குழி, தட்டாங்கல், உறியடித்தல், தாயம் உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும் பாலாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பை கொடுத்து மாணவர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை ரசித்தனர்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 109
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments