Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்; திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை; போக்குவரத்தில் மாற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்; திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை; போக்குவரத்தில் மாற்றம்சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நாளை நடைபெறுவதையொட்டி திருச்சியில் இன்று மதியம் முதல் நாளை மாலை வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கின்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா நாளை நடைபெறுகிறது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே திருச்சியில் இன்றும் நாளையும் போக்குவரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் குடமுருட்டி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்ல வேண்டும். அதேபோல் சேலம், நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் முசிறி கைகாட்டி, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம் வழியாக திருச்சிக்கு வர வேண்டும்.
திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், மணப்பாறை ஆண்டவர் கோயில் செக்போஸ்டில் திரும்பி குளித்தலை, முசிறி, பெரியார் பாலம், துறையூர் வழியாக பெரம்பலூர் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். அதேபோல், மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் லஞ்சமேடு கைகாட்டியில் திரும்பி மணப்பாறை, ஆண்டவர்கோயில் செக்போஸ்ட், குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர் வழியாக பெரம்பலூர் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். அதேபோல் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் கொள்ளிடம் ஒய் ரோடு சந்திப்பில் திரும்பி கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட்ரோடு, சிறுகனூர் வழியாக சென்னை டிரங்க் ரோட்டில் செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள், பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் பாலம் வழியாக திருப்பி விடப்படுகின்றன.
இன்று நண்பகல் முதல் நாளை 17-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 16-04-18
Total Visitors : 262
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments