Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியை அழகு படுத்த தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அழைப்பு

திருச்சியை அழகு படுத்த தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அழைப்புதிருச்சி மாநகரை அழகு படுத்தும் விதமாக சாலைகளின் நடுவில் அமைக்கப்பட்டு இருக்கும் மைய தடுப்பு பகுதிகளில் பூச்செடிகள் வைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி தென்னூர் அண்ணாநகர் சாலையில் கிரடாய் அமைப்பு சார்பில் ரூ.5 லட்சம் செலவில் சொட்டுநீர் பாசனத்துடன் 6 வகையான ‘பூ’ பூக்கும் செடிகள், 2 வகையான மரங்கள், 17 ஆயிரம் பூச்செடிகள் நட்டு வைத்ததை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கிரடாய் அமைப்பு நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.
இதேபோல் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மாநகரை அழகு படுத்த விரும்பினால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கித் தரப்படும் என்றும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் எஸ்.அமுதவள்ளி, உதவி ஆணையர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 16-04-18
Total Visitors : 105
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments