Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கொடிநாள் வசூலில் சாதனை படைத்த 8 வட்டாட்சியர்களுக்கு சான்றிதழ்-வெள்ளிபதக்கம் வழங்கி ஆட்சியர் பாராட்டு

கொடிநாள் வசூலில் சாதனை படைத்த 8 வட்டாட்சியர்களுக்கு சான்றிதழ்-வெள்ளிபதக்கம் வழங்கி ஆட்சியர் பாராட்டுதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 2015-ம் ஆண்டு கொடிநாள் வசூலில் அதிக வசூல் புரிந்த வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி சான்றிதழ்கள் மற்றும் வௌ்ளி பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
இந்திய நாட்டை காக்கும் முப்படை வீரர்களின் அரும்பணியையும், தியாகத்தையும் போற்றி நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி படை வீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. கொடிகள் விற்பனை மூலம், நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதி, படை வீரர்களுடைய குடும்பத்தினரின் நல்வாழ்விற்கும், முன்னாள் படைவீரர்களின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு படைவீரர் கொடி நாள் வசூலில் அதிக வசூல் புரிந்த வட்டாட்சியர்கள் ரெங்கராஜன் (ரூ.3,60,000), செல்வமதி (ரூ.3,62,458), ராஜேந்திரன் (ரூ.3,59,000), சிராஜுதின் (ரூ.3,34,000), சத்தியமூர்த்தி (ரூ.3,50,000), கணேசன் (ரூ.3,60,000), ஜவகர்லால்நேரு (ரூ.3,60,000), நில அளவைத்துறை உதவி இயக்குநர் சேகர் ஆகியோர் கொடி நாள் வசூல் செய்து இலக்கினை எட்டியதையொட்டி அரசு முதன்மை செயலாளரால் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வௌ்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்சி ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தலைமை வகித்து வட்டாட்சியர்களிடம் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அனைவரையும் பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சங்கரநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (பொது) (பொ) மற்றும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பழனிதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் வழங்கினார்.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 53
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments