Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தலைமை செயலாளர் தலைமையிலான குழுவினருன் முதல்வர் ஆலோசனை

தலைமை செயலாளர் தலைமையிலான குழுவினருன் முதல்வர் ஆலோசனை காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது. மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை இணைச் செயலாளர் சஞ்சய் குண்டூ, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினர். காவிரி விவகாரத்தில் கர்நாடகா மத்திய அரசு கூறியது பற்றி முதல் அமைச்சரிடம் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் முதல் அமைச்சரை சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

  Source : justknow.in
Post Date : 10-03-18
Total Visitors : 16
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments