Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ராமஜெயம் கொலை வழக்கை தூசி தட்டி எடுத்திருக்கும் சி.பி.ஐ.,

ராமஜெயம் கொலை வழக்கை தூசி தட்டி எடுத்திருக்கும் சி.பி.ஐ.,திருச்சியின் அசைக்க முடியாத சக்திகளுள் ஒன்றாக விளங்கியவர் திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார் என போலீஸில் புகார் பெறப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உடல் திருச்சி கல்லணை சாலை திருவளர்சோலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரமான கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீஸார் விசாரணை செய்வதில் திருப்தியில்லை என ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி லதா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 6 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியாமல் தடுமாறிய சிபிசிஐடி நீதிமன்றத்தின் கண்டனங்களை மட்டுமே அடிக்கடி பெற்று தற்போது சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்து தோல்வியை ஒப்புக்கொண்டது. ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டனர். ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனாலும் கொலையாளிகள் சிக்கவில்லை.
ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறினார் முதல்வர். ஆனாலும் யாரும் வாயே திறக்கவில்லை.
ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கில் நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கடந்த 6 ஆண்டுகாலமாக குற்றவாளிகள் குறித்த ஒரு துப்பு கூட கிடைக்காத நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, தூசி தட்டி நேற்று தனது விசாரணையை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக ராமஜெயம் உறவினா்கள், குடும்பத்தினா், நண்பா்கள் உள்ளிட்டவா்களிடம் தங்களுடைய விசாரணையை துவக்கியிருக்கின்றது.
சிபிஜயின் இந்த விசாரணையிலாவது உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 48
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments