Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக கல்லூரி வாயிலில் கொந்தலிக்கும் ஜனநாயக மாதர் சங்கத்தினர்

உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக கல்லூரி வாயிலில் கொந்தலிக்கும் ஜனநாயக மாதர் சங்கத்தினர்விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் 4 மாணவிகளும் ஒரே இடத்தில் இருக்கும்போது, அதில் ஒரு மாணவியின் செல்போனில் நிர்மலா தேவி பேசுகிறார். இவ்வளவு நாள் ஆசிரியை, மாணவி என்ற உறவில் இருந்தோம். இனி, நான் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப் போகிறேன். 4 பேரும் ஒரே இடத்தில்தானே இருக்கிறீர்கள் என்று பேச்சை தொடங்கி, வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையே என்று கேட்டு விட்டு தொடர்ந்து பேசும் அவர், தேர்வில் உங்களுக்கு மார்க் குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும். மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலர் உங்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் புத்திசாலிகள். நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் எனப்பேசி பாலியல் குற்றங்களுக்கு மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளுக்கு குருவாக இருக்க வேண்டிய பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் புரோக்கராக பேசிய ஆடியோ பேச்சு வாட்ஸ்-அப், முகநூல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மதுரை பல்கலைக்கழகமும் கல்லூரி நிர்வாகமும் முதல்கட்ட நடவடிக்கையாக நிர்மலாதேவியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர், மகளிர் அமைப்பினர், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலா ராணி தலைமையில் கல்லூரி முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் ஆர்.டி.ஓ. செல்லப்பா, தாசில்தார் கார்த்தியாயினி, காவல்துறை ஆய்வாளர் பால முருகன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  Source : justknow.in
Post Date : 16-04-18
Total Visitors : 68
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments