Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஆண்டு இறுதியையொட்டி டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

ஆண்டு இறுதியையொட்டி டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடிவருடம் தோறும் ஆண்டு இறுதியான டிசம்பர் மாதம் வணிக நிறுவனங்கள், மோட்டார் வாகனங்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆண்டு தள்ளுபடி விலையில் விற்பனையை உச்சத்திற்கு எடுத்துச்செல்வர். அதுபோல இந்தாண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாடல்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.
2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நவம்பர் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 35 சதிவிகதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆண்டு இறுதி சலுகையாக தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ.26,000 முதல் ரூ.1 லட்சம் முதல் தள்ளுபடி வழங்குகிறது.
டாடா டியாகோ மாடலின் தள்ளுபடி ரூ.26,000, டிகோர் மாடலுக்கு ரூ.32,000, செஸ்ட் ரூ.68,000, ஹெக்சா ரூ.78,000 மற்றும் ஸ்டார்ம் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் துவங்கிய விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன விளம்பரம் மற்றும் வியாபார பிரிவு தலைவர் தெரிவித்தார்.

  Source : justknow.in
Post Date : 06-12-17
Total Visitors : 111
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments