Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் சர்ச்சை: இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் சர்ச்சை: இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமாவிடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் விஜயகலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் விஜயகலா தற்போதைய சூழலில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் இயக்கத்தின் தேவை ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார். மேலும் இன்றைய சூழலில் தமிழ் ஈழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் எனத் தெரிவித்திருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என அழுத்தங்கள் அதிகரித்தன.
இதையடுத்து விஜயகலா தெரிவித்த கருத்து குறித்து சட்ட அமைச்சரின் கருத்தை பெற்று அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்த இலங்கையின் சபாநாயகர் , இது குறித்து விசாரணை நடத்துமாறு சட்ட அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்து விட்டதாக விஜயகலா தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர், பிரதமர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விஜயகலா கூறியுள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் தன்னை பதவி விலகுமாறு யாரும் கோரவில்லை என்றும் விஜயகலா தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் குறிப்பாக யாழ்குடா நாட்டில் வன்முறைகளும் குற்றச் செயல்களும் அதிகரித்து உள்ளதாகவும், மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டு வரும் வகையிலேயே கருத்து தெரிவித்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும், மக்களுக்காகவும் தான் தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக விஜயகலா மகேஷ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 06-07-18
Total Visitors : 77
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments